தமிழ் புறக்கணிப்பு யின் அர்த்தம்

புறக்கணிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் போக்கு.

  ‘சிறுவர்களின் பரிகாசமும் பெரியவர்களின் புறக்கணிப்பும் அவனை ஆத்திரமடையச் செய்தது’
  ‘பெற்றோர்களின் கவனக்குறைவாலும் புறக்கணிப்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்’
  ‘தொடக்கத்தில் இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் விஞ்ஞானிகளின் புறக்கணிப்புக்கு ஆளாயின’

 • 2

  எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஒரு செயல்பாடு, நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொள்ளாமல் அல்லது பங்கேற்காமல் செயல்படும் நிலை.

  ‘மாணவர்களின் போராட்டம், ஊர்வலம், கல்லூரிப் புறக்கணிப்பு போன்ற காரணங்களினால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது’
  ‘தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும் என்று வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது’