தமிழ் புறம் யின் அர்த்தம்

புறம்

பெயர்ச்சொல்

 • 1

  (உட்பகுதிக்கு எதிரிடையாக அமையும்) வெளிப்பகுதி.

  ‘புறத் தோற்றம்’
  ‘புற உறுப்புகள்’
  ‘புற உலகக் கவலை இல்லாமல் தனக்குள் ஆழ்ந்திருந்தான்’

 • 2

  (குறிப்பிடப்படும் ஒன்றை) ஒட்டி அல்லது சார்ந்து அமையும் பகுதி; பக்கம்.

  ‘மேஜையின் கீழ்ப்புறத்தில் கைகொடுத்துத் தூக்கு’
  ‘கோயிலுக்குத் தென்புறம் அவர் வீடு உள்ளது’

 • 3

  (இரு மாறுபட்ட நிலைகளைக் கூறும்போது) பக்கம்.

  ‘இந்த ஊரை விட்டுப் போவதில் எனக்கு ஒரு புறம் வருத்தம், மறுபுறம் மகிழ்ச்சி’

 • 4

  (இலக்கியத்தில் புற உலகத்தில் நிகழும்) வீரம், போர் முதலியவை குறித்துக் கூறும் பாடற்பொருள் பாகுபாடு.

  ‘புறப் பாடல்கள் பலவற்றில் போருக்கு எதிரான குரல்களை நாம் காணலாம்’