தமிழ் புறுபுறு யின் அர்த்தம்

புறுபுறு

வினைச்சொல்புறுபுறுக்க, புறுபுறுத்து

  • 1

    (கோபம், வெறுப்பு முதலியவற்றால்) முணுமுணுத்தல்.

    ‘அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டால் ஏதாவது புறுபுறுத்துக்கொண்டேயிருப்பார்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (மற்றவர்களைக் குறைசொல்லும் விதத்தில்) தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல்.

    ‘வயதுபோனதுகள் எந்த நேரமும் புறுபுறுத்துக்கொண்டேயிருக்கும்’