தமிழ் புலப்பாடு யின் அர்த்தம்

புலப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் இடத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை அல்லது சூழல் காரணமாகக் கண்ணால் பார்க்கக்கூடிய தூரம்.

    ‘வடஇந்தியாவில் குளிர் காலத்தில் கடும் பனியின் காரணமாகப் புலப்பாடு 100 அடி தூரத்திற்கும் குறைவாகவே இருக்கும்’

  • 2

    (ஒரு உண்மை, கருத்து போன்றவை) புலப்படும் தன்மை அல்லது நிலை.

    ‘இந்தக் கவிதையில் கருத்துப் புலப்பாடு தெளிவாக இல்லை’