தமிழ் புலம் யின் அர்த்தம்

புலம்

பெயர்ச்சொல்

 • 1

  (பல்கலைக்கழகத்தில்) தொடர்புடைய பல துறைகளை உள்ளடக்கிய பிரிவு.

  ‘மொழிப் புலத்தில் பல துறைகள் அடங்கியுள்ளன’

 • 2

  உயர் வழக்கு (பெரும்பாலும் வட, தென் ஆகிய சொற்களோடு இணைந்து) திக்கு; பக்கம்.

  ‘வடபுலம்’
  ‘தென்புலம்’

 • 3

  இன்னாருடையது என்று அடையாளப்படுத்தும் வகையில் குறிக்கப்பட்டிருக்கும் நிலம்.

  ‘மகாபலிபுரத்தில் இருக்கும் சொத்தின் புல எண்’

 • 4

  இயற்பியல்
  குறிப்பிடப்படும் விசை பரவியிருக்கிற அல்லது உணரப்படுகிற பரப்பு அல்லது பகுதி.

  ‘மின்காந்தப் புலம்’