தமிழ் புலம்பெயர் யின் அர்த்தம்

புலம்பெயர்

வினைச்சொல்-பெயர, -பெயர்ந்து

 • 1

  (கலவரம், போர் போன்ற காரணங்களால்) தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் செல்லுதல்.

  ‘போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் சிக்கித் தவித்த மக்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள்’
  ‘புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள்’

 • 2

  (பறவைகள் குறிப்பிட்ட பருவங்களில் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்கு) இடம்பெயர்தல்; வலசை போதல்.

  ‘காட்டு வாத்து, அன்னப்பறவை போன்ற நீர்ப்பறவைகள் புலம்பெயரும் பாதைகளில் பறவைக்காய்ச்சல் வைரஸைத் தம் எச்சங்களில் விட்டுச்செல்கின்றன’