தமிழ் புல்லரி யின் அர்த்தம்

புல்லரி

வினைச்சொல்புல்லரிக்க, புல்லரித்து

  • 1

    (உடலில்) முடி குத்திட்டு நிற்றல்; சிலிர்த்தல்; மயிர்க்கூச்செறிதல்.

    ‘அந்த விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் புல்லரிக்கிறது’

  • 2

    (உள்ளம்) கிளர்ச்சி அடைதல்.

    ‘அந்தத் தெய்வீக இசையைக் கேட்டதும் புல்லரித்தது’