தமிழ் புல்லரிப்பு யின் அர்த்தம்

புல்லரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில்) முடி குத்திட்டு நிற்கும் நிலை.

    ‘பூக்களிலிருந்து வந்த இனிய நறுமணம் நாசியை நிறைத்து உடலெங்கும் புல்லரிப்பை ஏற்படுத்தியது’

  • 2

    (உள்ளத்தில் ஏற்படும்) கிளர்ச்சி; பரவசம்.

    ‘சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கும் குழந்தைகளின் நாடகம் பார்வையாளர்களுக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தியது’