தமிழ் புல்லுருவி யின் அர்த்தம்

புல்லுருவி

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் மரங்களில் படர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வளரும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த கொடி.

  • 2

    உயர் வழக்கு ஒரு அமைப்பு, கட்சி போன்றவற்றில் இருந்துகொண்டே அவற்றுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நபர்.

    ‘நம்மிடையே இருக்கும் புல்லுருவிகள் யார்யார் என்று இனம்காண வேண்டும்’