தமிழ் புலவர் யின் அர்த்தம்

புலவர்

பெயர்ச்சொல்

  • 1

    செய்யுள் இயற்றும் புலமை உடையவர்.

    ‘பெண்பாற் புலவர்’

  • 2

    தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பாடமாகக் கொண்ட படிப்பு/அந்தப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றவர்.

    ‘புலவருக்குப் படித்திருந்ததால் பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது’