புளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புளி1புளி2

புளி1

வினைச்சொல்புளிக்க, புளித்து

 • 1

  புளிப்புச் சுவையைக் கொண்டிருத்தல்.

  ‘இந்த மாங்காய் புளிக்காது, இனிக்கும்’

 • 2

  (மாவு, தயிர் முதலியவை ரசாயன மாற்றத்தால்) புளிப்புச் சுவை அடைதல்.

  ‘தோசை மாவு புளித்துப்போய்விட்டது’

 • 3

  (ஒன்றைத் திரும்பத்திரும்பக் கேட்பதால் அல்லது பார்ப்பதால் ஒருவருக்கு அது) சலித்துப்போதல்.

  ‘இந்தப் பாட்டைக் கேட்டுக்கேட்டுக் காது புளித்துவிட்டது’
  ‘இந்த ஊரே எனக்குப் புளித்துவிட்டது’

புளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புளி1புளி2

புளி2

பெயர்ச்சொல்

 • 1

  புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி.

  ‘குழம்பு வைக்கக் கொஞ்சம் புளி கரைத்துவை’