தமிழ் புழக்கம் யின் அர்த்தம்

புழக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருக்கும் நிலை; பயன்பாடு.

  ‘புதிய ஐந்து ரூபாய் நாணயம் புழக்கத்துக்கு வந்துள்ளது’
  ‘ஆழாக்கு என்ற அளவை இப்போது புழக்கத்தில் இல்லை’
  ‘இந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் இருக்கிறதா?’

 • 2

  (ஓர் இடத்தில் மனிதர்) நடமாட்டம்.

  ‘வீட்டில் ஆள் புழக்கமே இல்லை’