தமிழ் புழங்கு யின் அர்த்தம்

புழங்கு

வினைச்சொல்புழங்க, புழங்கி

 • 1

  (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்.

  ‘முற்காலத்தில் மக்களிடத்தில் புழங்கிவந்த நாணயங்களின் கண்காட்சி’
  ‘குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே புழங்கும் சொற்கள் துறைச்சொற்கள் எனப்படும்’

 • 2

  (பாத்திரங்கள் போன்றவற்றை) பயன்படுத்துதல்.

  ‘புதுப் பாத்திரத்தையெல்லாம் இப்போது புழங்க வேண்டாம்’

 • 3

  பெரிய அளவில் பண நடமாட்டம் இருத்தல்; புரளுதல்.

  ‘அவரிடம் இப்போது தட்டுப்பாடில்லாமல் பணம் புழங்குகிறது’

 • 4

  (மனிதர்கள் ஓர் இடத்தில்) நடமாடுதல்.

  ‘இந்த அறையில் புழங்குவதற்குக்கூட இடம் இல்லாதபடி அவ்வளவு சாமான்கள்!’