புழு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புழு1புழு2

புழு1

வினைச்சொல்புழுக்க, புழுத்து

 • 1

  (காய், பயறு முதலியவற்றினுள்) புழு உண்டாதல்/புழு அரித்தல்.

  ‘வெயிலில் அவ்வப்போது காய வைக்காவிட்டால் பயறு புழுத்துவிடும்’
  ‘புழுத்த கத்திரிக்காயைத் தூக்கிப்போடு!’

புழு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புழு1புழு2

புழு2

பெயர்ச்சொல்

 • 1

  (எலும்புகள் இல்லாத) மிருதுவான தசையையே உடலாகக் கொண்ட (கால்கள் இல்லாத) ஊர்ந்து செல்லும் சிறிய உயிரினம்.

  ‘இலந்தைப் பழத்தினுள் புழு நெளிந்துகொண்டிருந்தது’
  ‘அவள் நினைவு என்னைப் புழுவாகக் குடைந்தது’