தமிழ் புழுங்கு யின் அர்த்தம்

புழுங்கு

வினைச்சொல்புழுங்க, புழுங்கி

 • 1

  காற்றோட்டம் இல்லாமலும் வெப்பத்தோடும் இருத்தல்; புழுக்கமாக இருத்தல்.

  ‘உள்ளே உட்கார முடியாத அளவுக்கு அறை புழுங்குகிறது’
  ‘உனக்குப் புழுங்கினால் சட்டையைக் கழற்றிவிடு’

 • 2

  (நெல்) அவிக்கப்படுதல்; வேக வைக்கப்படுதல்.

  ‘நெல் இன்னும் கொஞ்சம் புழுங்க வேண்டும்’

 • 3

  (பொறாமை, வருத்தம் போன்றவற்றை வெளிக்காட்டாமல்) குமுறிக்கொண்டிருத்தல்.

  ‘மனத்தில் வைத்துப் புழுங்காமல் யாரிடமாவது வாய்விட்டுப் பேசு’
  ‘அவனை நினைத்துப் பொறாமையால் புழுங்கிக்கொண்டிருந்தான்’