தமிழ் புழுதி யின் அர்த்தம்

புழுதி

பெயர்ச்சொல்

 • 1

  காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேலே எழக்கூடிய மண்ணின் நுண்மையான தூசு.

  ‘புழுதி பறக்க வாகனங்கள் வேகமாகச் சென்றன’
  ‘அவன் காலில் செம்மண் புழுதி படிந்திருந்தது’

 • 2

  வட்டார வழக்கு காய்ந்து தூளாக இருக்கும்படி உழப்பட்ட நிலப்பரப்பு.

  ‘புழுதியில் என்ன விதைக்கப்போகிறாய்?’