தமிழ் புஸ்ஸென்று யின் அர்த்தம்

புஸ்ஸென்று

வினையடை

 • 1

  (கோபம் வருவதைக் குறிக்கும்போது) சட்டென்று மிகவும் அதிகமாக.

  ‘பெரியவருக்கு ஏன் கோபம் புஸ்ஸென்று வருகிறதோ தெரியவில்லை’

 • 2

  (ஆர்வமூட்டும் அல்லது பரபரப்பூட்டும் வகையில் ஒன்று நிகழ்வதுபோல் தோன்றிப் பிறகு) எதிர்பார்த்தபடி இல்லாமல்; சப்பென்று.

  ‘ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் புஸ்ஸென்று படுத்துவிட்டது’
  ‘கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே காதல் தோன்றும் என்று எதிர்பார்த்தால் கடைசியில் புஸ்ஸென்று ஆகிவிட்டது’