பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ1

வினைச்சொல்பூக்க, பூத்து

 • 1

  (தாவரங்களில்) பூ தோன்றுதல்; மொட்டு விரிதல்; மலர்தல்/(தாவரங்கள்) பூக்களைத் தோன்றச் செய்தல்.

  ‘புன்னை மரம் பூத்துச் சொரிகிறது’
  ‘மல்லிகை இன்று பூக்கவில்லை’
  உரு வழக்கு ‘ஜார் மன்னரின் சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து பொதுவுடைமை அரசு பூத்தது’
  உரு வழக்கு ‘கல்லூரியின் இறுதி ஆண்டில்தான் அவர்களிடையே காதல் பூத்தது’

 • 2

  (பூஞ்சணம், உப்பு போன்றவை) படிதல்/(ஒரு பரப்பு, உடல் உறுப்பு, பொருள் போன்றவற்றில்) (குறிப்பிட்ட) நிற மாற்றம் ஏற்படுதல்.

  ‘ரொட்டியில் பூஞ்சணம் பூத்துவிட்டது’
  ‘உப்புப் பூத்த சுவர்கள்’
  ‘மஞ்சள் பூத்த கண்கள்’
  ‘மூன்று நாட்களாக ஒரே சட்டையைப் போட்டிருப்பதால் அதில் வியர்வை படிந்து உப்புப் பூத்திருந்தது’

 • 3

  (தொடர்ந்து பார்ப்பதால் கண் பார்வை) மங்குதல்.

பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ2

பெயர்ச்சொல்

 • 1

  (வண்ண) இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும் மென்மையான, (பெரும்பாலும் இனப்பெருக்கத்துக்கான) தாவரத்தின் பகுதி; மலர்.

 • 2

  (மத்தாப்பு முதலியவற்றிலிருந்து வரும்) பொறி.

  ‘மத்தாப்பிலிருந்து பூ சிதறியது’

பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (சேவல்) கொண்டை.

  ‘பூச் சிவந்த சேவல்’

பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ4

பெயர்ச்சொல்

 • 1

  (இந்திய நாணயத்தில்) சிங்க உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பக்கத்துக்குப் பின் பக்கம்.

பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ5

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) பூமி; நிலம்; உலகம்.

  ‘பூதானம்’

 • 2

  வட்டார வழக்கு (பயிரிடுவதைக் குறிக்கும்போது ஒரு) போகம்.

  ‘இந்தப் பூவில் சரியாக விளையவில்லை’

பூ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூ1பூ2பூ3பூ4பூ5பூ6

பூ6

இடைச்சொல்

 • 1

  அற்பமாகவோ அலட்சியமாகவோ கருதுவதை வெளிப்படுத்துவதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பூ! நான் செய்ய வேண்டிய வேலை இதுதானா?’
  ‘பூ! நீ பேசிய வீரம் எல்லாம் இவ்வளவுதானா?’