தமிழ் பூச்சி யின் அர்த்தம்

பூச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (கரப்பான், எறும்பு, வண்டு போன்ற) உடல் மூன்று பகுதிகளாகப் பிரிந்த, எலும்பு இல்லாத (பெரும்பாலும் பறக்கக் கூடிய) சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  ‘விளக்கைச் சுற்றிப் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன’
  ‘கிணற்றுத் தண்ணீரில் பூச்சிகள் மிதந்துகொண்டிருந்தன’
  ‘கண்ணில் ஏதோ பூச்சி விழுந்துவிட்டது’

 • 2

  கொக்கிப்புழு, நாடாப்புழு முதலியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  ‘வயிற்றில் பூச்சி இருந்தால் பசிக்காது என்று மருத்துவர் கூறினார்’