தமிழ் பூச்சு யின் அர்த்தம்

பூச்சு

பெயர்ச்சொல்

 • 1

  (காரை, வர்ணம் முதலியவை அல்லது ஈயம் முதலியவை) பூசப்பட்டிருத்தல்; பூசப்பட்டிருக்கும் முறை.

  ‘வெளிச் சுவருக்குப் பூச்சை ஆரம்பித்துவிடலாமா?’
  ‘என்ன கொத்தனாரே, பூச்சு சரியாக இல்லையே’

 • 2

  (உடலின் மேல் விபூதி, மருந்து போன்றவற்றை) பூசியிருக்கும் நிலை.

  ‘நெற்றியில் விபூதிப் பூச்சு’
  ‘சந்தனப் பூச்சு’
  ‘காயம் பட்ட இடத்தில் மருந்துப் பூச்சு’