தமிழ் பூசிமெழுகு யின் அர்த்தம்

பூசிமெழுகு

வினைச்சொல்-மெழுக, -மெழுகி

 • 1

  (ஒன்றைப் பற்றித் தெளிவாகக் கூறாமல்) ஏதேதோ சொல்லி நழுவுதல்.

  ‘அவருடைய மகனுக்கு நாலு லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கியிருக்கிறார். கேட் டால் பூசிமெழுகுகிறார்’
  ‘சும்மா பூசிமெழுகாமல் உண்மையைச் சொல்’

 • 2

  (நடந்த முறைகேட்டைப் பிறர் அறியாதபடி) மறைத்தல்.

  ‘நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை மேலதிகாரிகள் பூசிமெழுகப்பார்க்கிறார்கள்’