தமிழ் பூடகம் யின் அர்த்தம்

பூடகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வெளிப்படையாகத் தெரியாதது; ஊகித்து அறியும் வகையில் மறைமுகமாக இருப்பது.

  ‘அவனுக்கு இதுவரை பூடகமாக இருந்த ஒன்று இப்போது புரியத் தொடங்கிற்று’
  ‘‘பணத்தை யார் எடுத்தார்கள்?’ என்று கேட்டதற்குப் பூடகமாகப் புன்னகை புரிந்தான்’
  ‘பிடி கொடுக்காத பூடகமான பேச்சு’
  ‘படத்தில் துறவியின் உயிர் பிரிந்ததை உணர்த்தும் வகையில் பறவை ஒன்று பறந்துசெல்வதுபோல் பூடகமாகக் காட்டியிருந்தார்கள்’