தமிழ் பூட்டு யின் அர்த்தம்

பூட்டு

வினைச்சொல்பூட்ட, பூட்டி

 • 1

  பூட்டு போன்ற சாதனங்களைக் கொண்டு (கதவு, பெட்டி முதலியவற்றை) திறந்துகொள்ள முடியாதபடியோ அல்லது (வாகனங்களை) நகர்த்த முடியாதபடியோ செய்தல்.

  ‘பணம் வைத்திருந்த பெட்டியைப் பூட்டிச் சாவியை ரகசியமான இடத்தில் வைத்தான்’
  ‘‘வாகனங்களைப் பூட்டி நிறுத்தவும்’ என்று வங்கியின் வாசலில் இருந்த பலகையில் எழுதியிருந்தது’

 • 2

  (இழுத்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் மாடு, குதிரை முதலியவற்றை வண்டி, தேர் ஆகியவற்றில்) இணைத்தல்.

  ‘ஏழு குதிரை பூட்டப்பட்ட தேரில் அரசர் பவனி வந்தார்’
  ‘வண்டியில் மாட்டைப் பூட்டு’
  ‘ஐந்து நிமிஷத்தில் வண்டி பூட்டிக்கொண்டு வா’

 • 3

  அருகிவரும் வழக்கு (நகை) அணிதல்.

  ‘மணப்பெண்ணுக்கு ஏராளமான நகைகளைப் பூட்டிவிட்டார்கள்’

 • 4

  (கதவு, ஜன்னல் போன்றவற்றை) சாத்துதல்; மூடுதல்.

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (சட்டைப் பித்தானை) பொருத்துதல்.

  ‘பொத்தான் பூட்டாமல் நீதிமன்றத்தில் இருந்தவரைக் காவலாளி வெளியே அனுப்பிவிட்டார்’
  ‘பொத்தான் பூட்டாத கால்சட்டையுடன் வாசலில் விழுந்து கிடந்தான்’

தமிழ் பூட்டு யின் அர்த்தம்

பூட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (கதவு போன்றவற்றை) திறக்க முடியாமல் செய்வதற்காக அல்லது (வாகனங்களை) நகர்த்த முடியாமல் செய்வதற்காகச் சாவியின் மூலம் அல்லது ரகசிய எண்கள் மூலம் இயக்கப்படும் சாதனம்.

  ‘கதவில் பெரிய பூட்டு தொங்கியது’
  ‘மிதிவண்டிக்குப் பூட்டு இல்லையா?’
  ‘248 என்ற எண்ணைக் கொண்டுதான் என் பெட்டியின் பூட்டைத் திறக்க முடியும்’

தமிழ் பூட்டு யின் அர்த்தம்

பூட்டு

பெயர்ச்சொல்

 • 1

  சிட்டம்.