தமிழ் பூண் யின் அர்த்தம்

பூண்

வினைச்சொல்பூண, பூண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஆடை, ஆபரணம், மாலை போன்றவற்றை) அணிதல்; தரித்தல்.

  ‘மன்னர் நீராடிவிட்டு ஆடை, ஆபரணங்கள் பூண்டு அவைக்குச் செல்வதற்குத் தயாரானார்’
  ‘வேப்பம் பூ மாலை பூண்டிருக்கும் வேந்தனே!’

 • 2

  உயர் வழக்கு (நாடகம் முதலியவற்றில் வேடம்) தரித்தல்; ஏற்றல்.

  ‘ராமாயண நாடகத்தில் ராவணன் வேடம் பூண்டு நடித்தவர்’

 • 3

  உயர் வழக்கு (குறிப்பிட்ட தோற்றம், வடிவம், பெயர் போன்றவற்றை) கொள்ளுதல்; ஏற்றல்.

  ‘பிரதமரின் வரவை ஒட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது’
  ‘பெஸ்கி என்ற இத்தாலி நாட்டுப் பாதிரியார் தமிழ்மீது கொண்ட பற்றினால் வீரமாமுனிவர் என்ற பெயரைப் பூண்டார்’

 • 4

  உயர் வழக்கு (சபதம், உறுதி, துறவு முதலியவை) மேற்கொள்ளுதல்.

  ‘தனது குடும்பத்தை அழித்தவர்களைப் பூண்டோடு அழிக்கச் சபதம் பூண்டான்’
  ‘மந்திரவாதியை அழித்துவிட்டு இளவரசியை மீட்டுவரத் தளபதி உறுதி பூண்டார்’
  ‘விவேகானந்தர் இளம் வயதிலேயே துறவு பூண்டார்’
  ‘சுவாமி மௌன விரதம் பூண்டிருக்கிறார்’

 • 5

  உயர் வழக்கு (உறவு, நட்பு முதலியவை) வைத்தல்; கொள்ளுதல்.

  ‘எங்கள் கட்சி பிற கட்சிகளுடன் தோழமை பூண்டிருக்கிறது’
  ‘கல்லூரியில் படிக்கும்போதுதான் நாங்கள் நட்பு பூண்டோம்’

 • 6

  உயர் வழக்கு (தலைமை) ஏற்றல்.

  ‘நமது இயக்கத்திற்குத் தலைமை பூண்டு எல்லோரையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தலைவர் அவர்களே!’

தமிழ் பூண் யின் அர்த்தம்

பூண்

பெயர்ச்சொல்

 • 1

  (உலக்கை, பம்பரம், புத்தகம் முதலியவற்றின்) விளிம்புகளில் அல்லது முனைகளில் விரிசல், தெறிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகப் பொருத்தப்படும் இரும்பு, பித்தளை போன்ற உலோகத்தால் ஆன பட்டை அல்லது வளையம்.

  ‘அவர் வெள்ளிப் பூண் போட்ட கைத்தடி வைத்திருந்தார்’
  ‘பித்தளைப் பூண் போட்டிருந்த தேக்குமரக் கதவு’
  ‘மாட்டின் கூர்மையான கொம்புகள் இரண்டிலும் பூண்கள் பளபளத்தன’
  ‘பூண் போட்ட நாட்குறிப்பு’