தமிழ் பூத்தையல் யின் அர்த்தம்

பூத்தையல்

பெயர்ச்சொல்

  • 1

    (புடவை, படுக்கை விரிப்பு, தலையணை உறை போன்றவற்றில்) கையால் அல்லது தையல் இயந்திரத்தின் மூலம் அலங்காரத்திற்காகச் செய்யப்படும் வேலைப்பாடு.

    ‘பூத்தையல் வேலைப்பாடு உடைய ஆடைகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன’
    ‘வீட்டில் ஓய்வு நேரத்தில் பூத்தையல் செய்வேன்’
    ‘என் அக்கா பூத்தையல் வேலையில் தேர்ச்சி பெற்றவள்’