தமிழ் பூனைபோல் யின் அர்த்தம்

பூனைபோல்

வினையடை

 • 1

  ஓசையே இல்லாமல்; மிக மெதுவாக.

  ‘ரொம்ப நேரமாகிவிட்டதால் அப்பா திட்டுவார் என்று பயந்து அக்கா பூனைபோல் வீட்டில் நுழைந்தாள்’
  ‘காவல்துறையினர் அவனைத் தேடிக்கொண்டிருப்பதால் வீட்டின் கொல்லைப்புற வழியாகப் பூனைபோல் உள்ளே நுழைந்தான்’

 • 2

  ஒன்றும் தெரியாத அப்பாவிபோல்.

  ‘பூனைபோல் இருந்துகொண்டு, அவன் செய்யும் வேலையெல்லாம் பார்த்தாயா?’
  ‘செய்யும் தவறையெல்லாம் செய்துவிட்டு இப்போது பூனைபோல் நிற்பதைப் பார்!’