தமிழ் பூம்பூம் மாடு யின் அர்த்தம்

பூம்பூம் மாடு

பெயர்ச்சொல்

  • 1

    (கேட்பவர்கள் ‘நல்ல வாக்கு’ என்று நம்பும் வகையில்) கேட்கிற கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்றால் மேலும் கீழும், ‘இல்லை’ என்றால் பக்கவாட்டிலும் தலையை ஆட்டப் பழக்கிவைத்து, அலங்காரம் செய்து வீடுகளுக்குக் கூட்டிவரும் மாடு.

    ‘கேட்டதற்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டாதே!’