தமிழ் பூர்வீகம் யின் அர்த்தம்

பூர்வீகம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் தன்னுடைய வம்சாவளிக்கு) மூலமாகக் கொள்ளும் இடம்.

  ‘எங்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர்’

 • 2

  முன்னோர்மூலம் பெறுவது; பரம்பரையாக வருவது.

  ‘பூர்வீகச் சொத்தை விற்க உனக்கு உரிமை உண்டா?’

 • 3

  (காலத்தால்) பழமையானது.

  ‘பூர்வீகக் குடிகள்’