தமிழ் பூர்வாங்கம் யின் அர்த்தம்

பூர்வாங்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றுக்கு) துவக்கக் கட்டமாக அல்லது முதல் நிலையாக இருப்பது அல்லது செய்வது.

  ‘நடந்த கொலையைக் குறித்துப் பூர்வாங்க விசாரணை நடந்துகொண்டிருக்கிறது’
  ‘பொதுத் தேர்தலுக்குப் பூர்வாங்க ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன’
  ‘பள்ளத்தாக்கில் பூர்வாங்கமாகச் செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 900க்கும் மேற்பட்ட அரிய தாவரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது’
  ‘ஏவுகணையை விண்ணில் செலுத்துவதுகுறித்த பூர்வாங்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’