பூரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரி1பூரி2

பூரி1

வினைச்சொல்பூரிக்க, பூரித்து

 • 1

  மிகுந்த மகிழ்ச்சியையோ பெருமித உணர்வையோ அடைதல்.

  ‘திருமணக் கோலத்தில் மகளைப் பார்த்துத் தாய் பூரித்து நின்றாள்’
  ‘தான் பெற்ற வெற்றியை எண்ணிப் பூரித்துப்போனார்’

 • 2

  அருகிவரும் வழக்கு (மகிழ்ச்சியால் உடல்) பெருத்தல்.

  ‘திருமணமாகிக் கொஞ்ச நாளில் உடல் பூரித்துவிட்டது’

பூரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரி1பூரி2

பூரி2

பெயர்ச்சொல்

 • 1

  கோதுமை அல்லது மைதா மாவைப் பிசைந்து சிறு உருண்டையாக உருட்டி, அப்பளம்போல இட்டு, எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பண்டம்.