தமிழ் பெஞ்சு யின் அர்த்தம்

பெஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் முதுகைச் சாய்த்துக்கொள்வதற்கான வசதி இல்லாத) பலர் உட்கார்வதற்கான நீண்ட இருக்கை.

    ‘மருத்துவரைப் பார்க்கப் பலர் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருந்தனர்’
    ‘வகுப்பறையில் போதிய பெஞ்சுகள் இல்லாததால் மாணவர்கள் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர்’