தமிழ் பெட்டி யின் அர்த்தம்

பெட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை வைத்துத் தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றால்) சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.

  ‘பேனா, பென்சில் போட்டுவைக்க ஒரு பெட்டி வேண்டும்’
  ‘வெற்றிலைப் பெட்டி’
  ‘பாத்திரங்களை மரப் பெட்டியில் வைத்திருக்கிறேன்’
  ‘ஊருக்குப் போகத் துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கு’
  ‘தகரப் பெட்டி’

 • 2

  (ஓலை, நார் போன்றவற்றால் பின்னப்பட்ட மூடி உடைய) வட்ட அல்லது சதுர வடிவக் கூடை.

  ‘ஓலைப் பெட்டி’
  ‘நார்ப் பெட்டி’

 • 3

  (ரயிலில் பயணம் செய்வதற்கு அல்லது பொருள்களை ஏற்றிச் செல்ல) தேவையான வசதிகள் நிறைந்த, ஒன்றோடொன்று இணைக்கப்படும், அறை போன்ற அமைப்பு.

  ‘முதல் வகுப்புப் பெட்டி’
  ‘ரயில் தடம்புரண்டதில் எட்டுப் பெட்டிகள் கவிழ்ந்தன’

 • 4

  (பனை, தென்னை போன்ற உயரமான மரங்களில் ஏறுபவர்கள்) அரிவாள் போன்றவற்றைப் போட்டு இடுப்பில் கட்டிக்கொள்ளும் (தென்னம்பாளையால் செய்த) நீள் உருண்டை வடிவக் கூடை.