தமிழ் பெண் யின் அர்த்தம்

பெண்

பெயர்ச்சொல்

 • 1

  விலங்குகளில் அண்டத்தையும் தாவரங்களில் சூலகங்களையும் கொண்டிருக்கும் இனம்.

  ‘பெண் குலம்’
  ‘பெண் பனை’
  ‘பெண் யானை’
  ‘தென்னையில் ஒரே மரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் இருக்கும்’
  ‘முழு வளர்ச்சியடைந்த ஆண் குயிலும் பெண் குயிலும் ஒன்றுக்கொன்று நிறத்தில் வேறுபட்டுக் காணப்படும்’

 • 2

  மனிதரில் மேற்குறிப்பிட்ட பிரிவிலுள்ள ஒருவர்.

  ‘நேற்று உங்களைப் பார்க்க இரண்டு பெண்கள் வந்திருந்தனர்’

 • 3

  மகள்.

  ‘இவள் என் இரண்டாவது பெண்’

 • 4

  (திருமணத்தைக் குறிக்கும்போது) மணப்பெண்; நிச்சயம் செய்த அல்லது திருமணத்துக்காகப் பேசப்படும் பெண்.

  ‘பெண்ணுக்குப் பையனைப் பிடிக்கவில்லை’
  ‘என் பையனுக்கு அடுத்த மாதம் கல்யாணம். பெண் தூரத்துச் சொந்தம்தான்’
  ‘பெண் வீட்டார் எங்கே?’
  ‘பெண்ணை மணமேடைக்கு அழைத்து வந்தார்கள்’