தமிழ் பெயர்த்தெழுது யின் அர்த்தம்

பெயர்த்தெழுது

வினைச்சொல்-எழுத, -எழுதி

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (புத்தகம், ஓலைச்சுவடி, ஆவணம் போன்றவற்றில் உள்ளதை) பிரதியெடுத்தல்.

  ‘பழந்தமிழ் நூல்களைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதியே நம் முன்னோர் பாதுகாத்துவந்தனர்’
  ‘பத்திரங்களைப் பெயர்த்தெழுதுவது ஒரு கலை’

 • 2

  அருகிவரும் வழக்கு மொழிபெயர்த்தல்/(ஒரு படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு) மாற்றி எழுதுதல்.

  ‘தெலுங்கு நாடகங்களை அவர் தமிழில் பெயர்த்தெழுதியிருக்கிறார்’
  ‘பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத்தில் புரிந்துகொள்ள எளிதாக அவற்றை உரைநடையில் பெயர்த்தெழுத வேண்டும்’