தமிழ் பெயரால் யின் அர்த்தம்

பெயரால்

இடைச்சொல்

 • 1

  ‘(ஒன்றை விமர்சனத்துக்கு அல்லது கேள்விக்கு உட்படுத்தும் சூழலில் பயன்படுத்தும்போது) (குறிப்பிடப்படுபவரின்) ஒப்புதலுடன் அல்லது ஒப்புதல் பெற்றதாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘முதலமைச்சர் பெயரால் வெளிவந்துள்ள அறிக்கை’

 • 2

  ‘குறிப்பிடப்படும் ஒன்றின், ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி அல்லது (அதை, அவரை) காரணமாகக் கொண்டு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அலங்காரம் என்ற பெயரால் அலங்கோலம் நடந்திருக்கிறது!’
  ‘மதங்களின் பெயரால் எல்லோரும் அடித்துக்கொள்கிறோம்’
  ‘தாத்தாவின் பெயரால் நடந்த அவசரக் கல்யாணம் இது’