தமிழ் பெயரெடு யின் அர்த்தம்

பெயரெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (நல்ல விதத்திலோ கெட்ட விதத்திலோ) பலராலும் அறியப்படுதல்.

    ‘‘நன்றாகப் படித்து நல்ல பெயரெடுக்க வேண்டும்’ என்று பேரனுக்குப் புத்திமதி சொன்னார்’
    ‘இப்படிக் கெட்ட பெயரெடுக்காதே!’
    ‘அவர் அசாதாரணமான பிரச்சினைகளையும் கையாளுவதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர்’