பெயர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெயர்1பெயர்2பெயர்3

பெயர்1

வினைச்சொல்பெயர, பெயர்ந்து, பெயர்க்க, பெயர்த்து

 • 1

  (ஒன்று பற்றியிருக்கும்,பொருந்தியிருக்கும் அல்லது இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு இழந்து விடுபட்டுத் தனியே வருதல்.

  ‘பழங்காலக் கட்டடம் என்பதால் அடிக்கடி காரை பெயர்ந்து விழுகிறது’
  ‘மோதிரத்தில் ஒரு கல் பெயர்ந்து எங்கோ விழுந்துவிட்டது’
  ‘வெள்ளத்தால் தண்டவாளம் பெயர்ந்து கிடந்தது’
  ‘துருவங்களில் பனிப்பாறைகள் அவ்வப்போது கடலில் பெயர்ந்து விழுகின்றன’
  ‘நகம் பெயர்ந்து விரலில் ரத்தம் வந்தது’

 • 2

  (இருக்கும் இடத்திலிருந்து) மற்றொரு இடத்துக்குச் செல்லுதல்.

  ‘ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்குப் பெயர்ந்து உலகம் முழுவதும் மனித இனம் பரவிற்று என்று ஒரு கருத்து உண்டு’
  ‘வேலையின் காரணமாக அடிக்கடி ஊர் விட்டு ஊர் பெயர்ந்து போக நேரிட்டது’
  ‘பாரியின் மகள்களை அழைத்துக்கொண்டு புலவர் கபிலர் பறம்பு நாட்டிலிருந்து பெயர்ந்தார்’
  ‘போரின் காரணமாக மக்கள் தங்கள் மண்ணை விட்டுப் பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்’

 • 3

  பேச்சு வழக்கு (கேட்கப்படும் பணம்) கிடைத்தல்/(வர வேண்டிய தொகை) வசூலாதல்.

  ‘தருகிறேன் என்று சொன்ன இடத்திலும் பணம் பெயரவில்லை’
  ‘கடையில் தினமும் ஆயிரம் ரூபாய் பெயர்ந்தால்கூடப் போதும்’

பெயர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெயர்1பெயர்2பெயர்3

பெயர்2

வினைச்சொல்பெயர, பெயர்ந்து, பெயர்க்க, பெயர்த்து

 • 1

  (பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து ஒன்றை) விடுபட்டுத் தனியே வருமாறு செய்தல்.

  ‘இவ்வளவு பெரிய மரத்தைப் பெயர்த்து இன்னொரு இடத்தில் நடப்போகிறார்களா!’
  ‘ஒரு கல்லைக்கூடப் பெயர்க்க முடியவில்லை’
  ‘பல்லைப் பெயர்த்துவிடுவேன் என்று மிரட்டினான்’

பெயர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெயர்1பெயர்2பெயர்3

பெயர்3

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளவும் சுட்டிக்காட்டவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.

  ‘நீங்கள் என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடலாம்’
  ‘ஊர்ப் பெயர் ஆராய்ச்சி’
  ‘இந்தப் பறவையின் பெயர் வக்கா’
  ‘மேலத்தெரு ராமன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது’

 • 2

  (ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் போன்றவற்றின் மேல் பிறர் குறிப்பிட்ட முறையில் கொண்டிருக்கும்) மதிப்பு.

  ‘அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது’
  ‘இந்த நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் விதத்தில் நடந்துகொள்ளாதே!’
  ‘மோசமான படங்களில் நடித்துக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொண்டார்’
  ‘கல்லூரியில் எனக்கு இருந்த பெயரை நானே கெடுத்துக்கொண்டேன்’

 • 3

  ‘ஒன்று அல்லது ஒருவர் பொறுப்பு, தன்மை முதலியவற்றின் காரணமாகக் குறிப்பிட்ட முறையில் பிறரால் அறியப்படும் நிலை (ஆனால் நடைமுறையில் வேறு)’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘வீட்டுக்கு மூத்தவன் என்று பெயர். ஆனால் பொறுப்போடு எதையும் செய்வதில்லை’
  ‘கவிஞன் என்ற பெயரை வைத்துக்கொண்டு கடைசியில் நான் சாதித்தது ஒன்றும் இல்லை’

 • 4

  இலக்கணம்
  வாக்கியத்தில் எழுவாயாக வருவதும் வேற்றுமை உருபுகளை ஏற்பதுமான சொல் (வகை).

  ‘‘முயலைப் பிடித்தேன்’ என்பதில் ‘முயல்’ என்பது பெயர்’