தமிழ் பெரிது யின் அர்த்தம்

பெரிது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அளவில் அல்லது தன்மையில்) விரிவானது அல்லது அதிகமானது.

  ‘எங்கள் வீடு இதைவிடப் பெரிது’
  ‘உ.வே. சாமிநாதையர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பெரிது’
  ‘நான் பட்ட துன்பத்தைவிட அவர் பட்ட துன்பம் பெரிது’
  ‘உனது எதிர்பார்ப்பு பெரிதுதான்’
  ‘அதனால் பெரிதாகப் பலன் ஒன்றும் கிடைத்துவிடாது’
  ‘அவர் என்னிடம் பெரிதாக ஏதோ எதிர்பார்க்கிறார்’
  ‘மிகவும் பெரிதான சட்டை’

 • 2

  (மோசமாக இருந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் எதிர்பார்த்ததற்கு மாறாக) ஆறுதல் தருவது.

  ‘அவருக்கு இருக்கும் கஷ்டத்தில் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததே பெரிது’
  ‘அப்பா இந்த அளவுக்கு உன்னைப் படிக்க வைத்ததே பெரிது’

 • 3

  முக்கியமானது; தீவிரமானது.

  ‘எங்களுக்கு எங்கள் கோரிக்கைகள்தான் பெரிது’
  ‘பணம்தான் பெரிது என்று நினைத்திருந்தால் நான் உனக்கு உதவி செய்திருக்க மாட்டேன்’
  ‘அவன் சொன்னதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’