தமிழ் பெரிதுபடுத்து யின் அர்த்தம்

பெரிதுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (சாதாரணச் சண்டை, பிரச்சினை முதலியவற்றுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து அவை) மோசமாகுமாறு செய்தல்.

    ‘பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சமாதானத்திற்கு வழி தேட வேண்டும்’

  • 2

    (ஒன்றின் உருவத்தை) பல மடங்காக, கூடுதலாக ஆக்குதல்; பெரிதாக்குதல்.

    ‘புகைப்படத்தைப் பெரிதுபடுத்தும்போது அதன் துல்லியம் குறைகிறது’