தமிழ் பெரிய யின் அர்த்தம்

பெரிய

பெயரடை

 • 1

  (வடிவம், பரப்பு, எண்ணிக்கை போன்றவற்றில்) அதிக அளவை உடைய.

  ‘பெரிய வீடு’
  ‘பெரிய கதை’
  ‘பெரிய நூலகம்’
  ‘அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பரப்பளவில் இந்தியாவைவிடப் பெரிய நாடுகள்’
  ‘சென்னையைச் சுற்றிலும் சில பெரிய ஏரிகள் உள்ளன’
  ‘பெரிய மரம்’
  ‘10,000 ரூபாய் என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய தொகைதான்’
  ‘பெரிய காயம் என்பதால் ஆறுவதற்குக் கொஞ்சம் நாளாகும்’
  ‘எங்கள் ஊரிலேயே இதுதான் பெரிய கோவில்’

 • 2

  (ஒன்றின் தன்மையைக் குறிக்கும்போது) மிகுந்த, முக்கியமான, தீவிரமான அல்லது விரிந்த அளவிலான.

  ‘என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது’
  ‘இந்தப் பெரிய திட்டத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’
  ‘தாது வருஷத்தின்போது பெரிய பஞ்சம் ஒன்று வந்தது’
  ‘விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் பெரிய சோகம்’
  ‘வழக்கறிஞர் படிப்புக்காக வெளிநாடு சென்ற பிறகு காந்தியின் வாழ்வில் பெரிய மாறுதல்களைக் காண்கிறோம்’
  ‘உடனடியாகக் கவனிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய காரியம் ஒன்றும் இல்லை’

 • 3

  (தகுதி, மதிப்பு, அந்தஸ்து போன்றவற்றில்) மேல் நிலை கொண்ட; உயர்ந்த; உயர்.

  ‘பெரிய அதிகாரி’
  ‘பெரிய படிப்பு’
  ‘பெரிய கவிஞர்’

 • 4

  (வயதில்) மூத்த/ (உறவுப் பெயர் குறிப்பிடுபவரைவிட) மூத்த.

  ‘எனது பெரிய அண்ணன் அமெரிக்காவில் படிக்கிறான்’
  ‘பெரிய சித்தப்பாவுக்கும் நடு சித்தப்பாவுக்கும் சொத்துத் தகராறு’
  ‘பெரிய மாமனார்’

 • 5

  (ஏதோ ஒரு வகையில்) குறிப்பிடத் தகுந்த.

  ‘அவர் உங்கள் வீட்டுக்கு வந்ததே பெரிய விஷயம்’