பெரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெரு1பெரு2

பெரு1

வினைச்சொல்பெருக்க, பெருத்து

 • 1

  பருத்தல்.

  ‘எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடல் பெருக்காமல் இருக்குமா?’
  ‘சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மரம் நன்றாகப் பெருத்திருக்கிறது’

 • 2

  (ஒன்று) அதிகமாதல்; அதிகரித்தல்; பெருகுதல்.

  ‘ஊரில் பன்றிகளின் தொல்லை பெருத்துவிட்டது’
  ‘பொதுவாழ்வில் ஊழல் பெருத்துவருகிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின் தீவிரம்) அதிகமாதல்; வலுத்தல்.

  ‘நல்ல வேளையாக நான் விலக்கிப்பிடித்ததால், அவர்களுக்குள் சண்டை பெருக்காமல்விட்டது’
  ‘புயல் பெருக்காமல்விட்டது, நல்லதாகப் போயிற்று’

பெரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பெரு1பெரு2

பெரு2

பெயரடை

 • 1

  அதிக அளவிலான.

  ‘பெரு மகிழ்ச்சி’
  ‘பெரு வெள்ளம்’