தமிழ் பெருக்கெடு யின் அர்த்தம்

பெருக்கெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (நீர் முதலிய திரவம்) அதிக அளவில் வேகத்துடன் செல்லுதல்; பாய்தல்.

    ‘ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது’
    ‘அடிபட்ட இடத்தில் இரத்தம் பெருக்கெடுத்தது’
    உரு வழக்கு ‘அவன் மனத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது’