தமிழ் பெருகு யின் அர்த்தம்

பெருகு

வினைச்சொல்பெருக, பெருகி

 • 1

  (அளவில், தன்மையில் ஒன்று) அதிகரித்தல்.

  ‘சாலைகளில் நீர் தேங்குவதால் கொசுக்கள் பெருகுகின்றன’
  ‘மக்கள்தொகை பெருகி வருவதுகுறித்துக் கருத்தரங்கு நடந்தது’
  ‘இந்த ராசிக்காரருக்கு எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும், செல்வம் பெருகும்’
  ‘விலைகள் பெருகும்போது பணமதிப்பு குறையும்’
  ‘செய்தியைக் கேட்டதும் அவருக்கு உவகை பெருகியது’

 • 2

  உயர் வழக்கு (கண்ணீர்) அதிகமாகச் சுரத்தல்.

  ‘கடிதத்தைப் படிக்கப்படிக்கக் கண்ணீர் பெருகியது’