தமிழ் பெருமூச்சு யின் அர்த்தம்

பெருமூச்சு

பெயர்ச்சொல்

 • 1

  (நிம்மதி, வேதனை, கவலை முதலியவற்றின் அடையாளமான) நீண்ட மூச்சு.

  ‘விபத்தில் தன் குடும்பத்தினர் காயம் அடையவில்லை என்று அறிந்ததும்தான் பெருமூச்சு விட்டார்’
  ‘‘இரண்டு நாட்களாக வருமானம் இல்லாததால் பட்டினி’ என்று ஏக்கமும் பெருமூச்சுமாகச் சொன்னான்’
  ‘எப்படியோ ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தேன் என்று பெருமூச்சு விட்டார்’
  ‘பழங்காலத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதில் பயன் இல்லை’