தமிழ் பெருமை யின் அர்த்தம்

பெருமை

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி, பெற்றிருக்கும் நல்ல பண்பு முதலியவற்றைக் குறித்து ஒருவருக்கு) மகிழ்ச்சியையும் மதிப்பையும் தரும் உணர்வு.

  ‘மகன் முதல் பரிசு பெற்றதைப் பலரிடத்திலும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தான்’
  ‘நம் விளையாட்டு வீரர்களால் நாட்டுக்கே பெருமை’

 • 2

  (ஒன்றின்) உயர்ந்த நிலை; மேன்மை; கீர்த்தி.

  ‘குடும்பப் பெருமை’
  ‘குலப் பெருமை’
  ‘நட்பின் பெருமையை விளக்கும் திரைப்படம்’
  ‘இந்தக் கோயிலின் பெருமைகளை இங்குள்ள கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன’