தமிழ் பெருமைப்படுத்து யின் அர்த்தம்

பெருமைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின்) உயர்ந்த நிலை, தகுதி போன்றவற்றைச் சிறப்பித்தல்.

  ‘இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாகத் திகழும் அவர் விழா மேடைக்குத் தன் தாயை வரவழைத்து பெருமைப்படுத்தினார்’
  ‘இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளைப் பெருமைப்படுத்தத் தவறிவிட்டோம் என்பதே அவருடைய குற்றச்சாட்டு’

 • 2

  பெருமை கொள்ளச்செய்தல்.

  ‘பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்ததன் மூலம் தான் பயின்ற பள்ளியைப் பெருமைப்படுத்தினான்’