தமிழ் பெருமையடித்துக்கொள் யின் அர்த்தம்

பெருமையடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) அளவுக்கு அதிகமாகப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளுதல்.

    ‘தான் செய்ததுபோல் யாரும் செய்யவில்லை என்று அவர் பெருமையடித்துக்கொண்டார்’
    ‘உன் மகனைப் பற்றிப் பெருமையடித்துக்கொண்டது போதும், நிறுத்து’