தமிழ் பெருவழக்கு யின் அர்த்தம்

பெருவழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பழக்கவழக்கங்கள், சொற்கள் முதலியவற்றைக் குறித்து வரும்போது) வழிவழியாக அல்லது பரவலாகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கு.

    ‘வயதான பெற்றோர் மகனோடு வசிப்பதுதான் பெருவழக்காக இருக்கிறது’
    ‘எங்கள் வட்டாரத்தில் இந்தச் சொல் பெருவழக்காக உள்ளது’