தமிழ் பெறுமானம் யின் அர்த்தம்

பெறுமானம்

பெயர்ச்சொல்

  • 1

    (பணத்தின் அடிப்படையிலோ அல்லது குறிப்பிட்ட நிலை, தன்மை முதலியவற்றின் அடிப்படையிலோ ஒன்றின்) மதிப்பு.

    ‘இந்தக் கட்டடம் மட்டும் நகரத்தில் இருந்தால் இதன் பெறுமானம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டும் என்று கணக்குப் போட்டார்’
    ‘போதிய கிடங்கு வசதிகள் இல்லாததால் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள தானியங்கள் வீணாகின்றன’
    ‘பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள மரங்கள்’