தமிழ் பொங்கல் யின் அர்த்தம்

பொங்கல்

பெயர்ச்சொல்

 • 1

  (நேர்த்திக்கடனைச் செலுத்தும் பொருட்டு கோயிலுக்குப் போய்) பச்சரிசியை உலையில் இட்டுப் பொங்க வைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம்.

 • 2

  (தமிழ்நாட்டில்) தை மாதத்தின் முதல் நாளில் பச்சரிசியை உலையில் இட்டு வெல்லம் அல்லது உப்பு சேர்த்துத் தனித்தனியாகப் பொங்கவைத்துத் தயாரித்த சாதத்தைச் சூரியனுக்குப் படைத்துக் கொண்டாடும் பண்டிகை.

 • 3

  அரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேகவைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றித் தயாரிக்கும் சாதம்; சர்க்கரைப் பொங்கல்.

 • 4

  பச்சரிசியைப் பாசிப்பருப்புடன் வேகவைத்து மிளகு, சீரகம் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சிற்றுண்டி.

  ‘பொங்கலும் வடையும் கொடுங்கள்’